TNPSC Maths 10 Questions And Answers 001
All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam

1. ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. அந்த எண் என்ன? 

விடை : 16 

விளக்கமான விடை : 

x2+x+28=300 

x2+x+272=0 

(x+17)(x-16)=0 

x=16

2. செக்சா ஜெசிமல் என்ற எண் முறைக்கு அடி எண் எது? 

விடை : 60 

விளக்கமான விடை : 

செக்சா ஜெசிமல் என்ற எண் முறைக்கு அடி எண் 60.

3. பாய்சான் பரவலில் பண்பளவை m எனில் 

விடை : சராசரி m 

விளக்கமான விடை : 

பாய்சான் பரவலின் பரப்பளவை m எனில் சராசரி m.




4. இரண்டு எண்களின் மீ.பொ.ம 6 மற்றும் மீ.சி.ம. 1260 ஆகும். அவைகளில் ஒரு எண் 126 எனில் அடுத்த எண்

விடை : 60 

விளக்கமான விடை : 

மீ.பொ.ம மற்றும் மீ.சி.ம. வின் பெருக்கல் அந்த இரண்டு எண்களின் பெருக்கல் பலனுக்கு சமமாகும். 

1260 x 6 = 126 x X 

X=1260 x 6 / 1260 = 60. 




5. 6மீ. உயரமுள்ள ஒரு கம்பத்தின் நிழல் 4மீ ஆக உள்ளது. ஒரு மரத்தின் நிழல் 16 மீ ஆக இருக்கும் எனில் மரத்தின் உயரம் என்ன? 

விடை : 24 மீ 

விளக்கமான விடை : 

கம்பத்தின் நீளம் = 6 மீ 

அதன் நிழலின் நீளம் = 4 மீ 

மரத்தின் நிழல் = 16 மீ. எனில் 

மரத்தின் உயரம் = 16/4 x 6 = 24 மீ.




6. இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்கள் 

விடை : 24, 36 

விளக்கமான விடை : 

இரு எண்கள் 2x, 3x என்க. 

கூடுதல் = 2x +3x=60

5x=60

x=60/5=12 

எனவே அந்த எண்கள் =2x, 3x

=2x12, 3x12 = 24, 36. 




7. கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 சதவீதம் குறைத்தால் ஒருவர் ரூ. 720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலை என்ன? 

விடை : ரூ. 30 

விளக்கமான விடை : 

புத்தகத்தின் பிரதிகளின் எண்ணிக்கை x என்க. 

ஒவ்வொரு பிரதிகளின் விலையை ரூ. y என்க. 

(x-x X 20 / 100) (y+3) = 720

4x / 5 (y+3) = 720 

4x (y+3)=3600

x(y+3)=900 ………… (1)

3 பிரதிகளை அதிகமாக வாங்குகிறார். எனவே 

xy=720+3x ……………….. (2)

(1)மற்றும் (2)-லிருந்து 

720 + 3x + 3x = 900

6x = 180

x = 30 

எனவே பிரதிகளின் எண்ணிக்கை y=27 

விலையை குறைப்பதறகு முன் ஒரு பிரதியின் விலை = ரூ.30.




8. 12 செ.மீ. ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. 

அதன் பரப்பு குறையும் சதவீதம் 

விடை : 43.75 

விளக்கமான விடை : 

ஆரம் = 12 செ.மீ 

பரப்பு = π x 12 x 12 

= 144 π sq.m 

ஆரம் 25% குறைக்கப்பட்டால் 

அதாவது 100 - 25 

12 - ? 

12/100x25=3

குறைக்கப்பட்ட ஆரம் = 12 - 3 = 9 cm

அதன் பரப்பு = π x 9 x 9 = 81 sq.m 

வித்தியாசம் = π (144 - 81) = 63 π 

π 144 - 63 π 

100 - ? 

100/144 x 63 = 43.75

9. ஏ, பி- ஐ விட 10 வருடங்கள் மூத்தவர் x வருடங்களுக்கு முன்னால் ஏ,பி-ஐப்போல் இரு மடங்கு வயதானவர். இப்பொழுது பி-யின் வயது 12 ஆனால், x ஐக் காண்க. 

விடை : 2 

விளக்கமான விடை : 

பியின் தற்போதைய வயது =12 

ஏயின் தற்போதைய வயது =12 + 10 = 22 

x வருடங்களுக்கு முன்னால், 

ஏ-யின் வயது பி-ஐப் போல் இருமடங்கு 

2(12-x) = (22-x)

24 – 2x = 22-x

x = 2 

எனவே 2 வருடங்களுக்கு முன்னால் ஏ-யின் வயது பி-யின் வயதை விட இருமடங்கு ஆகும்.

10. 4 பேர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர்கள் ஒருநாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பார்கள்? 

விடை : 1 நாள் 

விளக்கமான விடை : 

4 பேர்கள் - 4மணி / நாள் - 4 நாட்கள் 

8 பேர்கள் - 8 மணி / நாள் – 4/8 x 4/8 x 4 = 1 நாள் 

எனவே அவர்கள் 1 நாளில் முடிப்பார்கள்.

This site will be your practice ground. You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from various competitive exams and presented here for your self training. There is no need of registration and no need to pay the money. It is free of cost. Start using it and share it with your friends if you like this website.

Post a Comment

Previous Post Next Post